Saturday, September 14, 2013

ஸ்ரீ நிஸர்கதத்த மகாராஜ்.

இவர் மராட்டிய தேசத்தில் வாழ்ந்தவர். இயற் பெயர் மாருதி.   1897 ஆம் ஆண்டு பிறந்து 1981 ஆண்டு மகா சமாதி அடைந்த அத்வைத குரு.  இவர் ஒரு பீடி மற்றும் பெட்டி கடை வைத்துருந்த சாதாரண பாம்பே வாசி. 

ஒரு நாள் தன் நண்பருடன் சித்தராமேஷ்வர்  மகாராஜ் என்பவரை சந்திக்க சோலாப்பூர் சென்றார்.  






                                                   ஸ்ரீ நிஸர்கதத்த மகாராஜ் (above picture).




Siddharameswhara Maharaj



 

அங்கு சித்தராமேஷ்வர் மகாராஜ் இவரிடம் " நீ இந்த உடலோ மனமோ இல்லை.  எல்லாவற்றையும் புறம் தள்ளி "நான்" என்ற உள் உணர்வில் ,  நாம் இருக்கிறோம் என்ற உள் உணர்வில் உன் மனதை செலுத்து.  அதுவே உனக்கு ஞானம் அடையும் கதவுகளை திறக்கும்.

என்று உபதேசம் செய்தார்.




                                                          ஸ்ரீ நிஸர்கதத்த மகாராஜ்.




அதை கேட்டு விட்டு பாம்பே திரும்பிய மாருதி தன் வேலை சமயம் போக மீதம் எல்லா நேரமும் நான் என்ற ,  தான் இருக்கிறோம் என்ற மூல உணர்வில் லயித்து மற்றதை எல்லாம் புறம் தள்ளினார்.  

கண், காது, கை போன்றவை போனாலும் நான் இருக்கிறேன் என்ற உணர்வில் மாற்றம் இல்லை.  எனக்கு ஒன்றும் தெரியாது என்றோ இல்லை நான் இறந்து விடுவேன் என்றோ சொல்லும் போது கூட நான் என்ற ஒரு மூல உணர்வு நம்மை விட்டு விலகுவது இல்லை.  இதையே கட்டியாக பிடித்து கொண்டு தியானம் செய்தார் மாருதி.  

அவருக்கு பல ஆன்மிக அனுபவங்கள் இறை தர்சினங்கள் வந்தது.  அப்போது கூட இந்த அனுபவம் எல்லாம் யாருக்கு வருகிறது என்று கேட்டார் மாருதி. தனக்கு தான் வருகிறது என்ற பதில் சொல்லி கொண்டார்.  இந்த "தான்"  என்னும் மூலம் தான் எல்லா அனுபவமும் பெறுகின்றது.  அதனால் இந்த உள் உணர்வில் மனதை செலுத்தி ஆன்மிக காட்சிகளையும் இறை காட்சிகளையும் கூட ஒதுக்கி ஆழ்ந்த தினத்தில் ஈடுபட்டார். பிறகு தன் குரு சம்ப்ரதாயமாகிய  தத்தாத்ரேய  நவநாத சம்பிரதாயத்தில் ஸ்ரீ ஸ்ரீ நிசர்க தத்தர் என்ற சன்யாச  நாமம் பெற்றார். 

No comments:

Post a Comment