Friday, September 5, 2014

மகான் சேஷாத்ரி சுவாமிகள் திருவண்ணாமலை Series -- I

             மகான் சேஷாத்ரி சுவாமிகள் திவ்ய சம்பவங்கள் வரிசை 1 . 

(  மகான் சேஷாத்ரி ஸ்வாமிகள் சரித்ரம் என்ற மூல நூலில் இருந்து எடுக்கப்பட்டது )

Page 211 4: பையன் வெங்கடராமன்

 வெங்கடராமன் என்ற 15 வயது பையன் ஒரு நாள் மாலையில் வீட்டில் சந்தயாவந்தனம் செய்து விட்டு விபூதி பூசி கும்குமம் தரித்து கொண்டு அம்மன் தர்சனதிர்க்கு கோவிலுக்கு புறபட்டான்.

இளையனார் கோவிலுக்கு எதிரில் நம் சுவாமி அவனை நிறுத்தி வைத்து எங்கு செல்கிறாய் என்று கேட்டார். பையன் அம்பாள் தர்ஷனதிர்காக என்றான். இங்கிருந்து உனக்கு அம்பாளை காண்பிக்கிறேன் பார்கிறாயா என்று சொல்லி எதிரில் நின்று அவன் கண்களை மூடி "நன்றாக பார்" என்றார். 

பையன் கோவிலுக்குள் விளங்கும் ஸ்ரீ அபீத குசாம்பிகையை எதிரில் கண்டான். ஆச்சர்யத்துடன் அவன் "இதோ பார்கிறேன்; நன்றா தோன்றுகிறாள்" என்றான்.

சுவாமி "இடுப்பில்  என்ன புடவை ? " என்றார்.  பையன்  " மஞ்சள் புடவை.
சுவாமி "கழுத்தில் என்ன மாலை?" பையன் "மல்லிகை பூ மாலை"  சுவாமி: "என்ன ஆபரணம் " பையன் :"தலையில்   கிரீடம் இடையில் ஒட்டியாணம் கால்களில் தண்டை" .

பிறகு சுவாமி கண்ணை திறந்து "போ உள்ளே போய் பார்" என்று சொல்லி பையனை அனுபிவிடார்.  அவன் பேரானந்தம் அடைந்து அம்பாள் கோவிலுக்கு சென்று தேவியை உற்று நோக்கி  சுவாமி காண்பித்த படியே எலாவற்றையும் பார்த்து சந்தோசம் தாங்க முடியாமல் உற்றார் உறவினர் தோழர் அனைவரிடமும் நடந்த வற்றை தெரிவித்தான் .

யாராக  இருந்தாலும் அம்பாள் இடத்தில சிறிது பக்தி இருந்தால் போதும் அவர்களிடத்தில் சுவாமி தன அன்பை இவ்வாறு    காண்பிப்பார். இதனாலும் ஸ்ரீ அம்பாளே நம் சுவாமி என்று தோன்றுகிறது. இருவரும் அபின்ன ஸ்வருபம் என்பது வ்யக்தம்